பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதய கம்மன்பில் தலைமையிலான பிவித்துரு ஹெல உருமயவே இவ்வாறு முறைப்பாடொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நாளை மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிவித்துரு ஹெல உருமய உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
குறித்த முறைப்பாட்டை வழங்குவதற்காக கட்சி தலைவர் பலரும் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment