கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று மேற்குறிப்பிட்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியைச் சந்திப்பதற்காக, கொழும்பு சென்று கொண்டிருந்த போது, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப்பின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆயர் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மன்னார் ஆயர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஆயரின் தலையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவுக்கு நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வூடக செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment