Latest News

May 15, 2015

தமிழீழ விடுதலை போராட்ட த்தை அழிக்க துணைபோனவர் இலங்கை வருகிறார்
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதான தூதராக செயல்பட்ட நார்வே முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு எரிக் சொல்ஹெய்ம் அளித்த பேட்டி: நான் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கைக்கு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. 

இலங்கைத்தீவு முழுவதிலும் துரிதமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை அடைவதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக இலங்கை அரசுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் சர்வதேச சமூகத்துடனும் இணைந்து கடுமையாகப் பணியாற்றுவேன். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் அவசியமாக உள்ளன. இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டினால்தான் மிகத்துரிதமாக நாடு அபிவிருத்தியடையமுடியும். இவ்வாறு எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.

இவர் விடுதலை போராட்டத்தை அழிக்க துணை நின்றவர் என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்களிடையே இவர் மீது இருக்கிறது 


« PREV
NEXT »

No comments