Latest News

May 21, 2015

ரவிகரனின் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேறியது
by admin - 0

முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக மிகவும் அதிகரித்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடற்றொழில் வாய்ப்புக்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது.   வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.   

 வடமாகாண சபையின் 28ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை பகல் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் கைதடியில் உள்ள மாகாணசபை அலுவலகத்தில் கூடியது.   இதன் போது பிரேரனையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய ரவிகரன் - இப்படியே போனால் முல்லைத்தீவில் தமிழ் மீனவர்கள் குளங்களில்தான் மீன் பிடிக்க வேண்டி வரும்.    

எனவே குளங்களைப் புனரமைக்கும் பணியை மாகாண விவசாய அமைச்சரும் குளங்களில் மீன் விடும் பணியை மீன்பிடி நன்னீர் மீன்பிடி அமைச்சரும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments