யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குலில் கைதான நபர்களுள் கணிசமானவர்கள் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.சிறிடொலோ மற்றும் முற்போக்கு மக்கள் முன்னணியின் முக்கிய தலைகள் கைதாகியுள்ளதன் மூலம் இது அம்பலமாகியுள்ளது.
பொலிஸாருக்கும் எமக்கும் இடையில் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி நிலைமையைச் சீர்குலைக்க சில விசமிகள் கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் என்பது எமக்கு நன்றாகப் புலப்படுகின்றதென தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்றைய வன்முறைச் சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கமும் இதேகருத்துக்களினை முன்வைத்துள்ளது.சிறு கட்சிகளினை சேர்ந்தவர்களே இவ்வாறாக வன்முறையினை தூண்டியதாக சிரேஸ்ட சட்டத்தரணி சிறீகாந்தா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அடித்து நெருக்கப்படும் நீதிமன்ற வளாகம் தப்பி ஓடும் காவற்துறையினர்
Posted by விவசாயி=farmer on Thursday, May 21, 2015

No comments
Post a Comment