குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றியே ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்தும் விடுவித்துள்ளது. செய்தியொன்றிற்காக ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதாவென்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
யாழ்ப்பாணம் நெல்லியடிப்பகுதியில் பொலிஸார் சிறுமியொருத்தியினை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதான செய்தியொன்று தொடர்பில் ஊடகவியலாளர் லோகதயாளன் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் தொடர்பான விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை நீதிமன்றம் அவரது கைதினை கண்டித்துள்ளதுடன் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமை சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டவரையறைகளை மீறுவதாக கருதப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்படுகின்ற ஒருவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் ரென்பதை தெரிவிக்க பொலிஸார் தவறிவிட்டதாகவும் அதே போன்று நீதிமன்றினிலும் தெரிவத்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments
Post a Comment