Latest News

May 17, 2015

மெரினா கடற்கரையில் இனப்படுகொலை நினைவேந்தல் நடைபயணம்-மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம்
by Unknown - 0

1948ம் ஆண்டு ஈழத்தில் இனவெறி கொண்ட கொடுங்கோலச் சிங்களரசிடம் ஆட்சி வந்த காலம் தொடங்கி இன்றளவிலும் அப்பாவி தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை நடத்தி வருகின்றது.

இந்த இனப்படுகொலைக்கு எதிராக முப்பது ஆண்டுகாலமாக மேதகு வே பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் போராடி வந்திருக்கின்றனர். இதன் உச்சக்கட்டமாக கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் சிங்களரசு ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. இந்த இனவெறி ,கொலைவெறி கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்றுக்குவித்த பிறகும் சிங்கள அரசிற்கு அடங்கவில்லை.

இன்றளவிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் ,குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்ந்துக்கொண்டுத் தான் இருக்கின்றது. செல்வி வித்தியா பள்ளியிலிருந்து கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம், இன்றைய உலகிற்கு தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்ந்துக் கொண்டிருப்பதற்கான ஓர் சாட்சியம்.

சிங்கள பேரினவாத அரசின் இன அழிப்பில் உயிரிழந்த தமிழ்ச் சொந்தங்களை நினைவேந்தி, முள்ளிவாய்கால் இனப்படுகொலை முடிவல்ல விடுதலை போராட்டத்தின் தொடக்கமே என்று மெரினாவில் மாற்றம்- மாணவர் இளையோர் இயக்கம் சார்பில் மாணவர்களும் இளைஞர்களும் அணிவகுத்துச் சென்று உலகிற்கு எதிரொலித்துள்ளனர்.

ஆறு ஆண்டு காலம் அல்ல அறுபது ஆண்டு காலம் சென்றாலும் ரணங்களும் வலிகளும் இன்றும் ஆற போவதுமில்லை, மாற போவதுமில்லை என்று ஒவ்வொரு ஆண்டும் உலகிற்கு நினைவுப்படுத்தும் தெரியப்படுத்தும் விதமாகவே மே 17 ஆம் நாள் தமிழ் உணர்வாளார்களும் இளைஞர்களும் மாணவர்களும் ஒன்று கூடுகின்றோம், இன்றும் ஒன்று கூடியுள்ளோம். சென்னை மெரினா கடற்கரையில் பறையிசையோடு தொடங்கிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அணிவகுப்பு திருவள்ளுவர் சிலையின் அருகே முடிவடைந்தது.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிக் கவிஞர். காசி ஆனந்தன் உட்பட பலரும் கலந்துக்கொண்டு இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு மலர்வளையும் வைத்து மரியாதை செய்துள்ளனர். இந்த நினைவேந்தல் மூலம் சிங்கள பேரினவாத அரசின் இனவழிப்பிற்கு தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு என்று உலகிற்கு வலியுறுத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.












« PREV
NEXT »

No comments