முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பினர் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் குருணாகல் மாளிகாப்பிட்டிய அருகில் சத்தியவாதி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போது நெருக்கமாக இருந்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அணி ஒன்றே ஒழுங்கு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, எஸ்.பி. நாவின்ன, ஜயரத்ன ஹேரத் ஆகியோர் முன்னின்று இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்து வருவதுடன் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹான் பெர்னாண்டோ இதற்குப் பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறார்.
இவர்கள் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்ற போதிலும் அசங்க நவரத்ன என்ற மாகாண சபை உறுப்பினரே கூட்டத்தை ஏற்பாடு செய்து வருவதாக வெளிகாட்டப்பட்டு வருகிறது.
கூட்டத்தை நடத்தும் மைதானத்தை தயாசிறி ஜயசேகர பெற்றுக்கொடுத்துள்ளார்.
குருணாகலில் இதுவரை நடைபெறாத வகையில் மிகப் பெரிய கூட்டமாக இந்த கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தூரம் உள்ளடங்கும் வகையில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒலிப்பெருக்கிகளை ஏற்றிய 2 சுமை ஊர்திகள் நேற்று குருணாகல் நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தயாசிறி ஜயசேகர, எஸ்.பி. நாவின்ன, ஜயரத்ன ஹேரத் ஆகியோர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நெருக்கமாக இருந்து வருகின்றனர்.
எனினும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் கூட்டத்தை நடத்த இவர்கள் ஏற்பாடுகளை செய்வது மைத்திரிபால சிறிசேன தரப்பினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments
Post a Comment