முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுத்தேர்தலில் போட்டியிட்டாலோ, அதில் வெற்றிபெற்று பிரதமரானாலோ அதனால் தனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லையென தன்னிடமும் சில எம்.பி.க்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக, ஐ.ம.சு.மு.வின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேண்டும் என்ற எங்களது நோக்கத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதோடு, அதனை உத்தியோபூர்வமாக அறிவிக்காவிடினும் தனிப்பட்ட முறையில் எம்மிடம் தெரிவித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டியில் இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment