தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நாகமணி ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து கொக்கட்டிச்சோலையில் தலைமறைவாகி வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2003ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்களை ஆரையம்பதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமை, மேலும் எட்டுப்பேரை காயப்படுத்தியமை போன்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments
Post a Comment