Latest News

May 23, 2015

யாழ்ப்பாண துப்பாக்கிச் சூடு மாணவன் படுகாயம்
by admin - 0

யாழ்ப்பாணத்தில் கடந்த 20ம் திகதி இடம்பெற்ற வித்தியா கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் யாழ் நீதிமன்றம் முன் இடம் பெற்றுள்ளது. இந்த வன்முறை ஒட்டுக்குழுக்களால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது அனைவருக்கும் வெளிச்சம்.

வித்தியா கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கக் கோரி யாழ் நீதிமன்றப் பகுதியில் ஒரு கவன ஈர்ப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொல்வதற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது அமைப்பைச் சேர்ந்த உணர்வாளர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

அப்போது அங்கே பொலிசார் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஒட்டுக்குழுக்கள் வித்தியாவின் கொலைச் சம்பவத்தை சாட்டாக வைத்து நீதிமன்றத்தை தாக்கினர். அவர்கள் தாக்கும் பொலிசாரும் பார்த்துக் கொண்டு நின்றுள்ளனர். இதன் பின்னர் நீதிவானின் கட்டளையை அடுத்து ஏதும் செய்ய முடியாத நிலையில் பொலிசார் தாக்கியவர்களில் பெருமளவானவர்களைத் தப்பிக்க விட்டு அப்பாவிகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். அத்துடன் துப்பாக்கிச்சூடும் நடாத்தபடப்டுள்ளது. இதில் அப்பாவி மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்,

கொக்குவில் மேற்கை சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரி வர்த்தக பிரிவை சேர்ந்த லிங்கேஸ்வரன் நிரோசன் அவர்கள் காலின் தொடை பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 3 ரவைகள் துளைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில்(விடுதி 30 கட்டில் இல.16) சிகிச்சைக்காக பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் அனுமதிகப்பட்டுள்ளார். இவ்வாறானவர்களை விடுவித்து இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரவலான கருத்துக்கள் தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments