மே 18 அன்று லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) நடத்திய ஊர்வலத்தில் ,அனைவரது கவனத்தையும் ஈர்த்த பெண் ஒருவர் இருக்கிறார். 4 தடிப் பசங்கள் சிங்கள ராணுவம் போல வேடமிட்டு ஒரு பெண்ணை தாக்கினார்கள். அவரும் நிலத்தில் விழுந்து அழுது புலம்பினார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பாய்ந்தது. அதனைப் பார்த்த நான், "இவர் நல்லா நடிக்கிறார்". உண்மையாகவே கண்ணீர் வருகிறது என்று நண்பனுக்குச் சொல்ல அவரும் ஆமாம் போட்டார். ஆனால் நேற்று வெளியான ஸ்கை நியூசின் வீடியோவைப் பார்த்து ஏங்கிப்போனேன்... அந்த அம்மா எதனையும் பொய்யாகச் செய்யவும் இல்லை நடிக்கவும் இல்லை. இது ஒரு உண்மைச் சம்வம் தான் !
குறித்த இந்தப் பெண்ணுக்கு லண்டனில் விசா இல்லை. அத்தோடு மறைந்து வாழ்ந்து வருகிறார். உண்ண உணவு இல்லை. கையில் 10 பவுன்ஸ் காசும் இல்லை. ஆனால் லண்டனில் மட்டும் 4 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். இவருக்கு சாப்பாடு கொடுப்பது என்னவோ ஆச்வே முருகன் கோவில். யாரவது ஒரு தமிழரின் வீட்டு திண்ணையில் , அல்லது கேராஜில் படுத்து உறங்குகிறார். ஆனால் எங்களை பாருங்கள். சும்மா ஹெலிகொப்டரை வாடகைக்கு அமர்த்தி மகளின் சாமத்திய வீட்டைச் செய்கிறோம். 50,000 பவுன்சுகளை செலவு செய்து மகனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அதே லண்டனில் எங்கோ ஒரு தெரு மூலையில் எம் தமிழ் அம்மாக்கள் படும் பாட்டைப் பார்த்தீர்களா ?
தமிழ் ஊடகங்களுக்கு அவர் அழு குரல் கேட்க்கவில்லை. ஆனால் ஆங்கில ஊடகங்களுக்கு மட்டும் ஏன் இந்த அக்கறை என்று அங்கலாய்க்கத் தோன்றுகிறது. 3 நிமிட வீடியோ தான். ஆனால் முழுமையாகப் பாருங்கல். இவருக்கு உதவிசெய்ய நினைப்பவர்கள் அவரை தொடர்புகொள்ளுங்கள். ஒரு வேளையாவது அவர் உண்டு நல்ல இடத்தில் உறங்க அவருக்கு உதவிபுரியுங்கள். "சேர்த்துவைத்த புண்ணியம் தான் சந்ததியைக் காக்கும்" என்பார்கள். அந்த புண்ணியத்தை நாம் செய்வோம் !
அதிர்வுக்காக,
கண்ணன்
amma by athirvu
நன்றி அதிர்வு
No comments
Post a Comment