யாழ்.குடாநாட்டில் போதைப் பொருள் பாவனை மற்றும் மதுபான பாவனை, பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான குற்றங்கள இடம்பெறும் இடங்கள் தொடர்பான தகவல்களை யாழ்.மாவட்டச் செயலகம் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் செயலகம் விடுத்துள்ளது குறிப்பு ஒன்றில் இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த தகவல்களை மாவட்டச் செயலகம் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தகவல்களில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்கப்படும் ஐந்து பிரபல பாடசாலைகளின் விபரங்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் சேஷ்டைகள் விடப்படும் 3 இடங்கள் குறித்த தகவல்கள் உள்ளடங்கலாக மொத்தம் 28 இடங்களை மாவட்டச் செயலகம் அடையாளப்படுத்தியுள்ளது.
குறித்த விபரங்களை வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மாவட்டச் செயலகம் அனுப்பி வைத்துள்ளது.
No comments
Post a Comment