Latest News

May 23, 2015

2015 ஐ.பி.எல் கிண்ணம் யாருக்கு?
by Unknown - 0

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.   

8 அணிகள் இடையிலான 8 ஆவது ஐ.பி.எல் போட்டியின் கோலாகல தொடக்க விழா கொல்கத்தாவில் கடந்த ஏப்ரல் 7ம் திகதி அரங்கேறியது.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 8 முதல் லீக் ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த போட்டி தொடரில் 56 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

லீக் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. அதே சமயம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ்,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.   

இந்நிலையில் முதல் தகுதிச்சுற்றில் சென்னை- மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி, சென்னையை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.   இதைத் தொடர்ந்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணியிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.   இதனையடுத்து 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் ராஞ்சியில் நேற்று மோதின. இதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை திரில் வெற்றி பெற்றது.   இதன் மூலம் சென்னை அணி 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்பு 2008, 2010,2011,2012, 2013 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. 

இந்நிலையில் இறுதிப் போட்டியில் சென்னை அணி, மும்பையை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகள் 3வது முறையாக மோதுகின்றன. 

2010ம் ஆண்டு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 22 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.   இதற்கு 2013ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுத்தது.   பரம எதிரிகள் மோதும் ஆட்டமாக கருதப்படும் இவ்விரு அணிகளின் மோதல் ஐ.பி.எல் தொடரில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
« PREV
NEXT »

No comments