Latest News

May 19, 2015

போராட்ட களமாகும் யாழ்ப்பாணம்
by admin - 0

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.நகரில் நீதிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குடாநாடே ஸ்தம்பித்து கிடக்கின்றது. 

குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் வாதாட கூடாது எனவும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கான இறுதி தண்டனையாக இருக்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

குடாநாட்டில் சகல வங்கிகள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இன்றைய ஆர்ப்பாட்டங்கள் கடையடைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றது. 

பாடசாலை மாணவர்கள், மக்கள் வீதியில் நிறைந்து நிற்க கண்டன போராட்டங்களால் நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

வீதிகளில் மக்கள் ரயர்கள் போட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்





« PREV
NEXT »

No comments