ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சென்ற குழுவினரையும் ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகெப்டர்கள் இரண்டு, வீதியில் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சென்ற குழுவினரையும் ஏற்றிக்கொண்டு இரண்டு ஹெலிகெப்டர்கள் ஹம்பாந்தோட்டை சூரியவௌவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்றன.
கொத்தலாவல, பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தை திறந்துவைப்பதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றிருந்தார்.
அங்கு பெய்த கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகவே, அந்த இரு ஹெலிகெப்டர்களும் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் காபர்ட் இடப்பட்ட வீதியில் தரையிறக்கப்பட்டன.
No comments
Post a Comment