உலகில் உள்ள மோசமான கிரிக்கட் நிர்வாகம் இங்கிலாந்து கிரிக்கட் சபை செயற்படுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் கிம் ஹியுஜெஸ் விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் கெவின் பீற்றர்சன்னிற்கு அணியில் வாய்ப்பளிக்காமை தொடர்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த வருடம் அணியிலிருந்து பீற்றர்சன் நீக்கப்பட்டார்.
பின்னர் அவர் ஐ.பி.எல். போட்டிகளில் கவனம் செலுத்திய நிலையில், மீண்டும் இங்கிலாந்தின் பிராந்திய போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டால் அணிக்குள் உள்வாங்கும் வாய்ப்பு இருப்பதாக, கெவின் பீற்றசர்சன்னுக்கு தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் பிராந்திய போட்டிகளில் விளையாடிய பீற்றர்சன் சிறந்த பெறுபெறுகளை பதிவு செய்தார். அவர் 320 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் பீற்றர்சன், இங்கிலாந்து கிரிக்கட் அணியின் புதிய பணிப்பாளரான அன்றுவ் ஸ்ட்ரோஸை சந்தித்த போது, பீற்றர்சன்னுக்கும், இங்கிலாந்து கிரிக்கட் சபைக்கும் இடையில் நம்பிக்கை அடிப்படையிலான பிரச்சினை இருப்பதாக ஸ்ட்ரோஸ் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து கிரிக்கட் சபையின் இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் வெட்கக் கேடான விடயம் என ஹியுஜெஸ் சாடியுள்ளார்.
கெவின் பீற்றர்சன் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருந்தாலும், அவர் ஒரு தென்னாப்பிரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment