Latest News

May 14, 2015

234 உள்@ராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!
by Unknown - 0

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் இன்று முதல் 234 உள்ளூராட்சி சபைகள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார்.

335 உள்ளூராட்சி சபைகளில் 234 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

65 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஜுலை 31 ஆம் திகதி நிறைவடையும் அதேவேளை 21 நிறுவனங்களின் பதவிக்காலம் ஒக்டோபர் 16 ஆம் திகதி பூர்த்தியடைகிறது.

இரு உள்ளூராட்சி நிறுவனங்களின் காலம் ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறைவடைகின்றன.

இந்த உள்ளூராட்சி சபைகள் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை கட்டளைச் சட்டங்களின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய இவற்றின் பதவிக் காலத்தை நீடிக்க முடியும். இருந்தாலும் எதிர்காலத்தில் தொகுதி வாரி அடிப்படை யிலான கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடத்தி உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஏற்றவாறு இவற்றின் பதவிக்காலத்தை மீண்டும் நீடிக்காது அவற்றின் காலம் தானாக முடிவடைய இடமளிப்பதாக அமைச்சர் கரு ஜெயசூரிய அமைச்சரவைக்கு அறித்தார்.

இதன்படி காலம் முடிவடையும் 234 உள்ளூராட்சி சபைகளினதும் நிர்வாகம் விசேட ஆணையாளர்களின் கீழ் வருகிறது.
« PREV
NEXT »

No comments