வித்தியா படுகொலையின் சந்தேகநபரான மகாலிங்கம் சிவகுமார் என்பவர் நாட்டைவிட்டு தப்பிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் புங்குடுதீவு மக்களால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி வி.டி.தமிழ்மாறன் மக்களின் எதிர்ப்பை மீறி பொலிஸார், கடற்படை மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் புங்குடுதீவிலிருந்து யாழ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான மகாலிங்கம் சிவகுமார் என்பவரை தங்களிடம் ஒப்படைக்கும் வரை சட்டத்தரணி வி.டி.தமிழ்மாறனை செல்ல அனுமதிக்க முடியாது என கூறி பொதுமக்கள் தடை ஏற்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட சமரசப் பேச்சுக்கள் வெற்றியளிக்காத நிலையில், மக்களின் எதிர்ப்பை மீறி வி.டி.தமிழ்மாறன் தற்போது யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
No comments
Post a Comment