முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது சொத்துக்கள் பயன்பாட்டில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்க முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments
Post a Comment