திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகேயுள்ள கோவில்பாளையத்தில் 4.5.2015 நேற்று நடைபெற்ற மருதம் உழவர் மன்றத் தொடக்கவிழாவில் மன்றத் தலைவர் கே.பி.சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்புச் செயலாளர் பல்லடம் மு.செந்தில் குமார் முன்னிலையில் நபார்டு உதவிப் பொது மேலாளர் திரு.வி.எஸ்.ஸ்ரீராம் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலைக் கழக தலைவர் பேராசிரியர் டாக்டர் செல்வராஜ்,நிதிசார் கல்வி மைய ஆலோசகர் டாக்டர் குப்புசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உழவர் உழைப்பாளர் சங்க நிறுவனத் தலைவரும்,உழவர் மன்றக் கூட்டமைப்பின் தலைவருமான பொங்கலூர் இரா.மணிகண்டன் விளக்கவுரை ஆற்றினார்.
No comments
Post a Comment