Latest News

May 11, 2015

கோத்தாவின் கைது-உயர்நீதிமன்றில் மனு தாக்கல்
by admin - 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் இன்று (11) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தன்னுடைய அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாகக் கூறும் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு சவால் விடுக்கும் வகையில் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

கைது செய்தல் மற்றும் விசாரணை செய்யும் திட்டங்களில் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு உள்ள அதிகாரத்தை கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவின் மூலம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்.

தன்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவில் கோரியுள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சரவை, ஜனாதிபதி செயலாளர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிதி மோசடி பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அறுவர் பெயரிடப்பட்டுள்ளனர்.

« PREV
NEXT »

No comments