முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.நிதி மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற பாரியளவிலான நிதி மோசடியுடன் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐந்து மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.வாக்கு மூலமொன்றை அளிக்க நாளை ஆஜராகுமாறு நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவினர் ஜொன்ஸ்டனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு ஜொன்ஸ்டனை அரசாங்கம் கைது செய்ய உள்ளதாக மஹிந்த ஆதரவு தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி குருணாகலில் மஹிந்தவை பிரதமராக்கும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் கூட்டத் தொடரின் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஜொன்ஸ்டன் கைது செய்யப்பட உள்ளதாக மஹிந்த ஆதரவு தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
No comments
Post a Comment