அதிகாரப் பகிர்வினால் பயனில்லையெனவும் தமிழ் மக்களுக்கு தனியான அரசொன்று தேவை எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
யாழில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் என இரு நாடுகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு தனியான தேசம் ஒன்றை உருவாக்குவதே தமது கட்சியின் இலக்கு எனவும் அவர் மேலும் கூறியுள்ளதாக இன்றைய சிங்கள நாளிதழ் ஒன்று அறிவித்துள்ளது
No comments
Post a Comment