மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு மனித உரிமை கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 57ம் படையணியை மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழிநடத்தியிருந்தார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்த அரசாங்கத்தின் வாக்குறுதி பாரியளவில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளார். கடந்த 7ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் யதார்த்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. எனினும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இவ்வாறு உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்ளின் முகத்தில் அரசாங்கம் அறைந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கிரமமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதனை எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், 57ம் படையணி பாரியளவில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கிட்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாரியளவில் குற்றம் சுமத்தப்பட்ட உயர் இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment