நியுசிலாந்தின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள தீவுப் பகுதியில் புவியதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் அறிக்கைகளுக்கு அமைய புவியதிர்வு 5.6 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புவியதிர்வு நியுசிலாந்தின் தெற்கு பிராந்தியத்தில் பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.
எனினும், உயிரிச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
No comments
Post a Comment