அதன்படி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆளுநரைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது ஆளுநர் ரோசய்யாவை ஜெயலலிதா சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் அமைச்சரவைப் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் கொடுத்தார்.. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் துறை விவரங்களை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது.
ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணியளவில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்துவைத்தார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சர்கள் 14, 14 பேராக ஒரே நேரத்தில் பதவியேற்றனர்.
No comments
Post a Comment