கிளிநொச்சியில் 16 வயது சிறுமியொருவர் கடந்த நான்கு நாட்களாக காணாமல்போயுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா (வயது -16) என்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி நகரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் தனது தாயாரை சந்திக்க குறித்த சென்ற சிறுமி சென்றுள்ளார்.
தாயாரை சந்தித்த பின்னர் குறித்த சிறுமி அன்று மதியம் வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் அவர் இதுவரை வீடுபோய்ச் சேரவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments
Post a Comment