மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.
மனிதக் கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்ட குடியேறிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட முகாம்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் இந்த புதைகுழிகள் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், இப்போது தான் எத்தனை புதைகுழிகள் என்ற விபரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை கூறுகின்றது.
தாய்லாந்தின் எல்லையோரத்தில் இதேவிதமான புதைகுழிகள் இந்த மாதத்தின் முற்பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment