Latest News

April 27, 2015

அல்லைப்பிட்டி சந்தி சேற்று நிலத்தில் ஆயதங்கள்
by admin - 0

அல்லைப்பிட்டி அலுமனியம் தொழிற்சாலைச் சந்திப் பகுதியிலுள்ள சேற்று நிலப்பகுதிக்குள் ஆயுதங்கள் இருப்பதாக ஊர்காவற்றுறை பொலிஸார் சனிக்கிழமை (25) தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வீதி புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள், வீதியின் அருகாமையிலுள்ள சேற்று நிலப்பகுதியில் ஆயுதங்கள் இருப்பதை கண்டு பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியதுடன் பொதுமக்கள் அங்கு செல்லாதவாறு தடுப்புகளை அமைத்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்படி பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததென தெரிவித்த பொலிஸார் ஆயுதங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினர்.

« PREV
NEXT »

No comments