யாழ்ப்பாணம் வலிகாமத்தில் நிலைத்தடி நீர் மாசடைந்துள்ளது என்பது தொடர்பில் குழப்பகரமான அறிக்கைகளும் செய்திகளும் வெளியாகி வருவதால் இந்த சிக்கலில் வடமாகாண முதலமைச்சர், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுனர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்றவர்கள் இதில் நேரடியாக தலையிடக்கோரி, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் எதிர்வரும் 07.04.2015 செவ்வைக்கிழமை காலை 8.00 மணியளவில் மக்கள் திரள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
தூய நீருக்கான பாதிக்கபட்ட மக்கள் ஒன்றியம் -இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம் - விதை குழுமம் நீருக்காகப் போராடும் அன்பார்ந்த மக்களே! எமக்கான இறுதிச்சந்தர்ப்பம்! ஒன்று திரள்வோம் வெற்றி பெறுவோம்!
1. வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் ஏற்பட்டிருக்கும் மாசடைதல் தொடர்பில் பல்வேறு குழப்பகரமான ஊகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இதன்போது , வடக்கு மாகாண சபையால் வெளியிட்ட 40 கிணறுகளை கருத்தில் கொண்ட, ஆய்வுரீதியான பரிசோதனை முடிவுகள் மக்கள் மத்தியில் அதீத குழப்பத்தையும் தெளிவின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது, இதன்போது மக்களால் எழுப்பப்பட்ட ஒரு சாதாரண கேள்வியான," இந்த நீரைக் குடிக்கலாமா ? கூடாதா? " என்ற கேள்விக்கு பொறுப்பானவர்களால் பதில் அளிக்கப்படவில்லை. * " இந்த நீரைக் குடிக்கலாமா ? கூடாதா? " இந்த அடிப்படையானதும் எளிமையானதுமான கேள்விக்கான பதிலை வடக்கு மாகாண சபையின் நீருக்கான விஷேட செயலணியின் தலைமை வழங்கவேண்டும்.
2. தலைமை பதிலளிக்கதவிடத்து கௌரவ முதலமைச்சர் ,அல்லது கௌரவ ஆளுநர் , அல்லது அரசாங்க அதிபர் ஆகியோர் இதற்கான பதிலை பெற்று மக்களை தெளிவுபடுத்தவேண்டும். 2. இந்த மாசடைதல் தொடர்பில் என்ன நடகின்றது என்பதில் பொதுமக்களாகிய நாம் தெளிவின்றி இருக்கிறோம் . ஆகவே மக்களின் நம்பிக்கையையும் காத்திருப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு, " வாரா வாரம் இந்த மாசடைதல் தொடர்பில் எந்த விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன, என்றும் - மற்றும் எந்த எந்த இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது . " போன்ற தரவுகள் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் .மேலும் குடிநீர் வழங்கல் மற்றும் புதிய நீர்த்தாங்கிகள் வழங்கல் என்பன முறையான ரீதியில் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
3. இந்த மாசடைதலின் போது மக்களாகிய நாம் பல்வேறு தரப்புக்களையும் உதவிக்காக அணுகினோம், எமது குரலை வெளிப்படுத்தகோரினோம், ஆனால் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள்கூட கிடைக்கவில்லை .ஆகவே விசேட செயலணியின் தலைமையை, சக்தியும் ஆளுமையும் வாய்ந்த தலைமைகள் பொறுப்பேற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதனால் விசேட செயலணியின் நிரந்தர தீர்வை நோக்கிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை கௌரவ முதலமைச்சர் , கௌரவ ஆளுநர் ,மற்றும் அரசாங்க அதிபரின் கூட்டுத்தலைமை மற்றும் கூட்டுப்பொறுப்பின் கீழ்மேற்பார்வை செய்யப்படவேண்டும். அதுவே செயல்திறன் மிக்க அணியாக இருக்கும் என்பது மக்களின் கருத்து .
மேற்குறித்த அம்சங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவினை தெரிவித்து, ஒரு மாபெரும் பேரணி வருகின்ற 07.05.2015 செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து கோயில் வழியாகச் சென்று முதலமைச்சர், ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதி ஆகியோருக்கு மனுவை கையளிக்கும் . இது ஒரு கடைசி போராட்டமாக இருக்கும், இதன்போது மாணவர்களும் பொதுமக்களும் " நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்" என்ற கோஷத்துடன் இணைக்கப்படுவர் . எமது உயிருக்கு இணையான நண்பர்களே, நாம் பொறுமையை இழந்துவிட்டோம். நாம் நமது வாழ்வாதார பிரச்சினை பற்றி பேசப்போகிறோம், தமது இயற்கைக்காகவும் தமது எதிர்கால சந்ததிக்காகவும் தமது வாழ்நாளின் ஒரு நாளை கொடுக்க தயாராகும் ஒவ்வொரு மனிதரையும் நாங்கள் நல்லூரின் முன்றலில் சந்திக்க விரும்புகிறோம் . முற்று முழுதான அரசியல் கலப்பற்ற பேரணியாக இது அமையும்,
எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ இந்த போராட்டத்தில் பங்குபற்றமுடியாது. சுருக்கமாகச் சொன்னால் இது மக்களினதும் மாணவர்களினதும் போராட்டம், அரசியல்வாதிகளுக்கு தடை .
இதன் போது பல்வேறு மாணவர் அமைப்புக்களும் பொது அமைப்புக்களும் கலந்து கொள்ளவுள்ளன . இன - மத - பேதமற்ற ஒரு பேரணியாகவும் இது அமையும் , நீருக்காகவும் எமது எதிர்காலதிற்காகவும் ஒன்று திரள்வோம் இவ்வண்ணம், தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம் விதை குழுமம்.
Social Buttons