Latest News

April 13, 2015

யாழ். மாவட்ட நிலத்தடி நீரில் உயிர் ஆபத்தை உருவாக்கும் நச்சுப் பாதார்த்தம் இல்லை! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
by admin - 0

யாழ்.மாவட்டத்தின் நிலத்தடி நீரில் BETX ஹைதறோ காபன் என்னும் உயிர் ஆபத்தை உருவாக்கும் நச்சுப் பாதார்த்தம் இல்லை. என தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வேறு சில மாசுக்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளமைக்கான தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
விடயம் தொடர்பாக முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
மாவட்டத்தின் குடிநீரில் எண்ணை மற்றும் தூசு உள்ளிட்ட சில மாசுக்கள் உள்ளமை கண்டறியப்பட்டிருக்கின்றது. ஆனாலும் நீரில் BETX என்னும் உயிர் ஆபத்தை உருவாக்கும் நஞ்சு இல்லை.
என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தின் நாங்கள் குடிநீர் விநியோகத்தை தொடருமாறு கோரியிருக்கின்றோம். மேலதிகமாக எமது நிபுணர்குழு அறிக்கை வெளியாகும் வரையில் பொறுமையாக இருக்குமாறும் நாங்கள் இன்று கேட்டிருக்கின்றோம்.
இதேபோன்று நிபுணர் குழுவில் மேலதிகமாக நிபுணர்களை இணைத்துக் கொள்வதற்கும் நாங்கள் இணக்கப்பாடு தெரிவித்திருக்கின்றோம்.
இதேபோல், வடமாகாணத்திலுள்ள நீர் நிலைகள் தொடர்பாக, ஆய்வுகளை நடத்தி முழுமையான பரிந்துரைகளை எமக்கு வழங்குமாறு நிபுணர் குழுவிடம் நாங்கள் ஒரு கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
இதன் மூலம் வடமாகாணத்தில் எதிர்காலத்தில் நிலவும் நீர் பிரச்சினைக்கு நாமே தீர்வு காணமுடியும். என அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
« PREV
NEXT »

No comments