![]() |
மஹிந்த |
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
நாளைய தினம் இந்த விசேட சந்திப்பு தங்காலையில் நடைபெறவுள்ளது. புத்தாண்டு காலத்தில் சிங்கள மரபுகளின் அடிப்படையில் புத்தாண்டின் பின்னர் உறவினர் வீடுகளுக்கு செல்வது மரபாகும்.
அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள மஹிந்தவின் வீட்டுக்கு நாளை செல்லவுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ எந்தக் கட்சியின் கீழ் போட்டியிடுகின்றார் என்பது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடுவது குறித்து மஹிந்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment