Latest News

April 16, 2015

மகிந்தவின் வீட்டு விருந்துக்கு சென்ற 57 உறுப்பினர்கள்
by admin - 0


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கால்டன் வீட்டுக்கு 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் விருந்துக்கு சென்றுள்ளனர்.
இதன் போது பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில பிரதேச சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான டலஸ் அலகப்பெரும, பந்துல குணவர்தன, குமார வெல்கம, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, ரி.பீ.ஏக்கநாயக்க, ஜீ.எல்.பீரிஸ், சாலிந்த திசாநாயக்க, மகிந்தானந்த அளுத்கமகே, காமினி லொக்குகே, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, உள்ளிட்டோர்களும் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க சென்றுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதியுடன் அரசியல் தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு புதுவருட வாழ்த்துக்களை தெரிவிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சி பிரதிநிதிகளும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments