Latest News

April 06, 2015

ஆட்சி மாற்றம் நாம் எதிர்பார்த்த எதனையும் எமக்கு தந்துவிடவில்லை-விக்கி
by Unknown - 0


ஆட்சி மாற்றம் நாம் எதிர்பார்த்த எதனையும் எமக்கு தந்துவிடவில்லை என அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியிடம் தான் தெரிவித்தகாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அது தொடர்பில் முதலமைச்சர் கருத்து  தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

அரசியல் மாற்றம் எந்தவிதமான நன்மை தீமைகள் அளித்துள்ளன என்பது பற்றி  என்னிடம் கேட்டார், அதற்கு நான் நாம்  எதிர்பார்த்தவை நடைமுறையில் இல்லை என குறிப்பிட்டேன்.

அதற்கு தங்களால் முடிந்த மட்டில் அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்த தங்களுடைய நாடு எல்லாவித்திலும் பாடு படும் என அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் உறுதி அளித்தார், என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »