Latest News

April 06, 2015

முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல்-யாழ்.ஆயர்
by Unknown - 0


முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவி வருவதாக வடக்குக்கு விஜயம் செய்த பிரதமரிடம் முறையிட்டு இருந்தார்கள். அது தொடர்பில் பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக யாழ்.ஆயர் அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி ஆயர் இல்லத்தில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகத்தை சந்தித்தார்.

அது தொடர்பில் ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஆட்சி மற்றம் மக்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தி இருகின்றது. அதனால் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. ஆனா தமிழ் மக்களுக்கு அதனால் சிறிய மாற்றமே ஏற்பட்டுள்ளது.

காணிகளை திருப்பி கொடுப்போம் என கூறி 1000 ஏக்கர் காணியில் 400 ஏக்கர் காணியை விடுவித்து உள்ளார்கள் மிகுதியையும் விடுவிப்பதாக கூறியுள்ளார்கள் அதேபோல இன்னமும் 1000 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள். இந்த நடவடிக்கை கள் எமக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

வடக்குக்கு பிரதமர் வந்த போது வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் நட்பு ஏற்படவில்லை. அது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. என அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தேன் என ஆயர் தெரிவித்தார்.

அத்துடன் அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் தமது அரசாங்கம் மக்கள் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், வீட்டுத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் என்பவற்றை வழங்க தயார் என தன்னிடம் தெரிவித்ததாகவும் யாழ்.ஆயர் தெரிவித்தார்.
« PREV
NEXT »