Latest News

April 12, 2015

தமிழீழ ஆசிரியர் மு.வே.யோகேசுவரன் அவர்கள் எழுதிய "வாய்க்கால் கரையோரம்" சமகால வரலாற்று நாவல் அறிமுகம்.
by admin - 0

தமிழீழ ஆசிரியர் மு.வே.யோகேசுவரன் அவர்கள் எழுதிய "வாய்க்கால் கரையோரம்" சமகால வரலாற்று நாவல் அறிமுகம்.
வாய்க்கால் கரையோரம்
வாய்க்கால் கரையோரம்

■ தென் தமிழீழத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அழகிய தமிழ்க் கிராமம் பண்குளம், சிங்கள இனவாதத்தால் பற்றி எரிந்த கதை இது.

■ அகமும், புறமுமாக வாழ்ந்த மக்கள் தன் நாட்டில் அகதியாக ஒடி ஒளிந்த கதை இது.
சிங்கள இனவெறியால், தன்னையும், தன் சுற்றத்தையும் காக்க தமிழீத்தில் உள்ளவர்களின் கையில் கருவி (ஆயுதம்) திணிக்கப்பட்ட கதை இது.

■ பெண்களின் உண்மைக் காதலையும், தன் மத வேற்றுமையால் நிறைவேறாத காதலையும், காதலனை மறக்க முடியாமல் தவிக்கும் இரு பெண்களைப் பற்றிய கதை இது.

■ தன் ஊரில் உள்ள பெண்களை தமிழச்சி என்ற ஒரே காரணத்திற்க்காக சிங்கள இனவாத மிருகங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தி, மார்பகங்களை அறுத்தெரிந்த கதை இது.

■ ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும், தன் அம்மாவை, அக்காவை, தங்கையை திண்று, அப்பாவை, அண்ணனை, தம்பியைக் கொண்று, தன் வீட்டை அழித்து தன்னை தனியனாக்கிய என்னற்ற பிள்ளைகள்...
மீசைமுளைக்காத வயதிலும் விடுதலைப் புலிகளாகி துவக்கேந்திய கதை இது.

■ சிங்கள இனவெறி இராணுவம தன் அம்மாவை கொண்று போட்டதை அறியாமல்... இறந்த தாயின் மார்பில் பால் தேடி, சிங்கள இனவெறி ஆட்டத்தை, இந்த உலகிற்க்கு சொல்லாமல் சொல்லும் குழந்தை குயிலியின் கதை இது.

■ குயிலோடும், மயிலோடும் பறவைகளின் குரல்களில் பாடிக்கொண்டு, பொருளாதார வேறுபாடு பார்க்காமல், தன் நல்ல மனதிற்க்கும், நாட்டுப் பற்றுக்கும் ஒரு பெண் மனதில் இடம்பெற்று, அவளையே தன் மனைவியாகப் பெற்று தன் குழந்தையுடன் வாழ்ந்த ஒருவன்...

தன் மண்ணின் விடுதலை வீரன் ஆன கதை இது.

இல்லை...

இது கதை இல்லை, சிங்கள இனவாதத்தால் அழிந்த தமிழீழத்தின் வரலாறு.!!

நாவலாசிரியரின் முகநூல்: https://www.facebook.com/yogeshwaranvelu

வாய்க்கால் கரையோர நாவலின் முகநூல் பக்கம்: https://m.facebook.com/profile.php?fc=f&showPageSuggestions&id=709793915802782&_rdr

குரல் பதிவு : காந்தள் அரசி


« PREV
NEXT »

No comments