யாழ் கல்வியங்காடு சந்தியில் விபத்து
யாழ்-பருத்தித்துறை பிரதான வீதி கல்வியங்காடு சந்தியில் சற்றுமுன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றது. செம்மணி வீதி வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்று சந்தியைக் கடக்க முற்பட்டபோது பிரதான வீதியூடாக வேகமாக வந்த உந்துருளி அதன்மீது மோதி விபத்துக்குள்ளானது. உந்துருளியின் முன் பக்கம் சேதங்களுக்குட்பட்டபோதும் அதில் பயணம் செய்தவர் காயங்கள் ஏதுமின்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளார். மேலதிக விசாரணைகளை தற்பொழுது கோப்பாய் பொலிசார் மேற்கொள்கின்றனர்.
No comments
Post a Comment