Latest News

April 27, 2015

பிரித்தானியாவில் நடுகல் நாயகர்கள் நினைவு வணக்கநாள்
by admin - 0

தமிழீழ மண்ணை மீட்டெடுக்கும் விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் வரை தீரமுடன் போராடி வீரச்சாவடைந்த நடுகல் நாயகர்கள் நினைவு வணக்க நாள், மே மாதம் 2ஆம் நாள் சனிக்கிழமை மாலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை HA2 9ER, South Harrow, 89 Malvern Avenue என்னும் முகவரியில் அமைந்துள்ள Church Hall இல் நடைபெற உள்ளது.

வல்லாதிக்கசக்திகளின் துணையோடு சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட தமிழின அழிப்புப்போரின் போது, தமிழீழ மண்ணுக்காகத் துணிவோடு களமாடி வீரவரலாறு படைத்து நடுகல் நாயகர்களானவர்கள் நினைவாக இந்நினைவு வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகத் தமிழர்கள் எல்லோரும் தாம் வாழும் நாடுகளின் தெருக்களில் இறங்கி ஓங்கிக் குரலெழுப்பி, ஓயாது பல்வேறு வழிகளில் போராடியும் எதுவுமே பயனற்றுப் போக, தமிழ் இனத்தையே முற்றாகக் கருவறுக்கும் நோக்குடன் தனது ஆதிக்க நகர்வுகளை முடுக்கி விட்டிருக்கும் சிறீலங்கா அரச பயங்கரவாதம் தமிழீழ மண்ணை குருதி ஆற்றில் குளிக்க வைத்தது. ஆக்கிரமிப்புக் கைகள் எல்லாம் ஒன்றிணைந்து நடாத்திய முள்ளிவாய்க்கால் வரையான போரின் போது, தம் இறுதி மூச்சு வரை தாயகமே உயிர்மூச்செனப் போராடி நடுகல் நாயகர்களானவர்கள், என்றும் தமிழீழ மக்களின் மனங்களில், தொடர்ந்து மண் மீட்கப் போராடும் வல்லமை கொடுப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நடுகல் நாயகர்கள் நினைவு வணக்கநாளில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளவருமாறு அழைக்கின்றோம்.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தொடர்புகளுக்கு 0203 371 9313

« PREV
NEXT »

No comments