எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு வேறெந்த கட்சியுடனும் இணைந்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக கூறப்பட்டிருந்தது.
எனினும் இதனை இரண்டு தரப்புமே மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment