நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம், முன்னொருபோதும் இல்லாதவாறு சூரியனுக்கு மிகவும் அண்மையில் விண்கலமொன்றை அனுப்புவது தொடர்பான தனது திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த ‘சோலர் புரொப் பிளஸ் ‘ விண்கல ஏவுகை திட்டத்தின் கீழ் சூரிய காற்று மற்றும் சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளிப்படும் துணிக்கைகள் என்பன தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ் விண்கலம் சூரியனை நெருங்கிச் செல்கையில் சுமார் 2,500 பாகை பரனைட் அளவான வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும் .
மேற்படி விண்கல ஏவுகை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதியிலிருந்து 20 நாள் காலப் பகுதியில் இடம்பெறவுள்ளது.
சூரியனுக்கு மிகவும் அண்மையிலான விண்கல பறப்புகள் சூரியனின் மேற்பரப்பிலிருந்து 3.8 மில்லியன் மைல் தூரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Social Buttons