சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்றல் 11 முதல் 20 வரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் பலர் இதற்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவ்விசேட பாதுகாப்பு நடவடிக்கைக்காக வழமையாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கு மேலதிகமாக 500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் பட்டாசு உட்பட வெடிபொருட்கள் விநியோகிப்பவர்களிடம் கட்டாயம் அனுமதிப் பத்திரம் காணப்படல் வேண்டும் எனவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons