காவத்தை, கொட்டகெத்தனவில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சந்திராணி ஸ்வர்ணலதா (வயது 39) என்பவரின் கொலை தொடர்பில் அவரது 18 வயதான மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பபேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையிலிருந்து காணாமல் போயிருந்த அந்த பெண், வீட்டிலிருந்து சுமார் 500-600 மீற்றர் தூரத்திலிருக்கும் வாய்க்காலிலிருந்து மறுநாள் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸாரே அவரது மகனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரை கொழும்புக்கு அழைத்துவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண்ணின் கொலை தொடர்பில் மிக முக்கியமான தகவல்களை பெற்றுகொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments
Post a Comment