Latest News

April 03, 2015

யெமனிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல்!
by Unknown - 0



யெமனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினால் அங்குள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விமானங்களை யெமனுக்குள் தரையிறக்க முடியாத நிலை காணப்படுவதே இந்த சிக்கல் நிலைக்கு பிரதான காரணம் எனக் கூறப்படுகின்றது. அங்கு ஏற்பட்டுள்ள யுத்த சூழ் நிலையினால் தரை மார்க்கமாகவோ, கடல், வான் மார்க்கமாகவோ நாட்டை விட்டும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எது எவ்வாறிருப்பினும், இந்தியாவும், சீனாவும், இந்தோனேசியாவும் இலங்கையர்களை உதவ முன்வந்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »