முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரும் செயற்பாட்டின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியினர் இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
![]() |
ரணில் |
அவ்வாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவே ஐதேக செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
'ஐதேக இதேபோன்று 1980ம் ஆண்டும் செய்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ குழுவிற்கு ஐதேக சார்பாக இருந்து ஒத்துழைப்பு வழங்கியது' என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என்றும் ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைப்பாட்டில் ஐதேக செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இதனால் மகிந்தவின் வரவால் சுகந்திர கட்சி இரண்டாகும் அதில் குளிர் காய ரணில் முயற்சி செய்கிறார்.
Social Buttons