ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் சென்னைக்கான நான்காவது புதிய விமானசேவையை இன்று (16) ஆரம்பிக்கிறது.
இச்சேவையுடன் சேர்த்து இந்தியாவுக்கும் இலங்கைக்குமான ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸின் சேவை 86ஆக அதிகரித்துள்ளது.பயணிகளின் நலன் கருதி மேலதிக சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. தென்னிந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நகரங்களில் ஒன்றான சென்னை ஒரு வியாபார கேந்திர நிலையமாக அமைந்துள்ளது வியாபார பொது முகாமையாளர் சமிந்த பெரேரா தெரிவித்தார்.
No comments
Post a Comment