Latest News

April 11, 2015

20 தமிழரை சுட்ட மிஸ்டர் நாயுடு..செம்மர மாஃபியா "கடப்பா" கங்கிரெட்டியை ஓடவிட்டு சுடுவீரா?
by Unknown - 0


படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் செம்மரம் வெட்டினார்கள். வெட்டினார்கள் என கூப்பாடு போடும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் மொரிசீயஸ் சிறையில் இருக்கும் சர்வதேச செம்மரக் கடத்தல் மாஃபியா 'கடப்பா' கங்கி ரெட்டியை கொண்டு வந்து நடுரோட்டில் சுட்டுத் தள்ள முடியுமா? என்பதுதான் தமிழர்கள் எழுப்புகிற கேள்வி. 

200க்கும் மேற்பட்ட தமிழர்கள் செம்மரம் வெட்ட வந்தார்களாம். சின்னஞ்சிறு போலீஸ் படை போய் தடுக்கப் போனதாம்.. தமிழர்கள் திருப்பித் தாக்கினார்களாம். காக்கை குருவிகளைப் போல சுட்டுப் பொசுக்கிவிட்டார்களாம்.  படங்களைப் பார்க்க பார்க்க மனசாட்சி உள்ள எந்த ஒரு மனிதரின் ரத்தமும் கொதிக்கத்தான் செய்யும்.

பச்சைப் படுகொலை செய்துவிட்டு பச்சை பொய்மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறது ஆந்திரா அரசும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும்... உண்மையில் 20 தமிழர்கள் ஆந்திரா அரசியலின் அக்கப் போருக்காக பலியாடுகளாக்கப்பட்டுவிட்டார்கள்...
ஆம் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டிக்கும் இடையிலான அரசியல் பஞ்சாயத்தில் தமிழர்கள் ரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது ஆந்திரத்து வனதேசங்களில்.  என்பதே யதார்த்தம்..

2003ஆம் ஆண்டு ஆந்திரா முதல்வராக இருந்த போது சந்திரபாபு நாயுடு மீது திருப்பதியில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு நக்சலைட்டுகளே காரணம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சந்திரபாபு நாயுடுவுக்கு குறி வைத்தது செம்மர மாஃபியா கங்கி ரெட்டிதானாம்... ஒய்.எஸ். ராஜசேகரின் கோட்டையான கடப்பா பகுதியைச் சேர்ந்த கங்கி ரெட்டி 'சிலரது அரசியல்' ஆதாயங்களுக்காக சந்திரபாபு நாயுடுவுக்கு இலக்கு வைத்திருக்கிறான்.
இருப்பினும் நாயுடு தப்பித்துவிட்டார்... சில காலத்துக்கு முன்னர் கங்கி ரெட்டியும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி பதுங்கிவிட்டான். இந்நிலையில் மீண்டும் ஆந்திரா முதல்வரானார் சந்திரபாபு நாயுடு.

மத்தியில் பாரதிய ஜனதாவை ஆதரிக்கவும் செய்தார் நாயுடு... இந்த நிலையில்தான் மொரிசீயஸ் நாட்டு போலீசில் "கடப்பா" கங்கி ரெட்டி சிக்கி சிறையில் இருப்பதும் தெரியவருகிறது.. கங்கி ரெட்டியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறாராம் நாயுடு
கங்கி ரெட்டிக்கு மிக கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கு முன்னோட்டமாக 20 தமிழர்களை கைது செய்து செம்மரக் கடத்தல்காரர்கள் என்ற முத்திரை குத்தி படுகொலை செய்திருக்கிறது நாயுடு சர்க்கார்..

அத்துடன் கங்கி ரெட்டியை இந்தியாவுக்கு கொண்டு வருவதன் மூலம் அவன் மூலம் ஆதாயம் அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களையும் அம்பலப்படுத்தி அவர்களது அரசியல் எதிர்காலத்துக்கு சவக்குழி தோண்டுவதும் சந்திரபாபுவின் ப்ளானாம்.

இந்த அக்கப் போர் அரசியலுக்குத்தான் தமிழ்நாட்டின் 20 அப்பாவி ஜீவன்களை பலியாடுகளாக்கியிருக்கிறார்கள் "நாயுடுகளும்" 'ரெட்டிகளும்"... உங்களையெல்லாம் எப்படித்தான் சபிப்பதோ?


நன்றி tamil one

« PREV
NEXT »