Latest News

April 22, 2015

நாடாளுமன்றம் கலைக்கப்படாது -மைத்திரி உறுதி
by Unknown - 0

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் நாளை நிறைவடைந்தாலும், நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பதில் தூதுவர் அன்ட்ரூ மான், பிரித்தானிய பிரதித் தூதுவர் லாறா டேவிஸ், ஜேர்மனி தூதுவர் ஜேர்ஜன் மோர்ஹாட் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் இன்று பிற்பகல் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னரே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக எழுந்துள்ள சூழல் குறித்து மேற்கு நாட்டுத் தூதுவர்களுக்கு எடுத்துக் கூறியதுடன், அரசியலமைப்புத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார்.

இதன் போது, ஜனநாயகத்தை வலுப்படுத்தும், ஊழல் மோசடிகளை ஒழிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளுக்கு தமது நாடுகள் முழு ஆதரவளிக்கும் என்று தூதுவர்கள் தெரிவித்தனர்.

« PREV
NEXT »

No comments