மன்னார் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பேசாலையில் ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்றை அமைக்க வேண்டும் என மன்னார் பிரதேச சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த புதன்கிழமை (15) மன்னார் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார் சபைத் தலைவர் எஸ். மாட்டீன் டயஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆயுர்வேத வைத்தியசாலையின் அவசியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பேசாலைப் பகுதியில் ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்றை அமைக்குமாறு தலைமன்னார் பேசாலை மக்கள் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வட மாகாண சுதேச வைத்திய அமைச்சருடனும் மன்னார் சுதேச ஆயுர்வேத வைத்திய சங்கத்திடமும் கலந்துரையாடி பேசாலையில் ஒரு ஆயுர்வேத வைத்தியசாலையை நிர்மாணிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
No comments
Post a Comment