Latest News

April 18, 2015

உயிருடன் இருப்பதை விட இவன் செத்துப் போகலாம்: கழுத்து நிற்காத நோயால் அவதிப்படும் மகனின் பெற்றோர் வேதனை
by admin - 0

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் அஹிர்வார்-சுமித்ரா அஹிர்வாரின் மகன் மஹேந்திரா அஹிர்வாருக்கு தற்போது 12 வயது ஆகின்றது. பிறவியிலேயே முதுகெலும்பு பாதிப்புடன் பிறந்ததால் மஹேந்திராவின் கழுத்தும் தலையும் தோள்பட்டையை ஒட்டி நிற்காமல் 180 டிகிரி கோணத்தில் கழுத்தறுப்பட்ட கோழியின் தலையைப் போல் துவண்டு, தொங்கி விடுகின்றது.


இதனால் நிற்கவோ, நடக்கவோ முடியாமல் தொங்கிய தலையுடன் மெதுவாக தவழ்ந்து மட்டுமே செல்லும் இவனது நிலையை மாற்ற கூலித்தொழிலாளிகளான மஹேந்திராவின் பெற்றோர் சுமார் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்களிடம் சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் காணப்படவில்லை.

குளிப்பது, உணவு உண்பது, கழிப்பறைக்கு செல்வது உள்பட அனைத்து தேவைகளுக்கு தாயார் சுமித்ராவின் உதவியை நாடி ஒரு குழந்தையைப் போல் வீட்டில் வளையவரும் மஹேந்திரா படும் அவஸ்தை அக்கம்பக்கத்தில் உள்ள சில பிள்ளைகளுக்கு கேலிப்பொருளாகி விட்டுள்ளது.


அதுமட்டுமின்றி, பெற்றவர்கள் செய்த பாவம்தான் பிள்ளைக்கு இந்த நோய் வடிவில் வந்து தாக்கியுள்ளது என்று ஊராரும், உறவினர்களும் கூறும் வேளையில் ஈட்டிமுனையை விட கூர்மையாக தாக்கும் இந்த வார்த்தைகள் முகேஷ் அஹிர்வார்-சுமித்ரா அஹிர்வார் தம்பதியரை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கின்றது.


இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து சுமார் 2 வார காலம் பல பரிசோதனைகள் செய்து பார்த்தும் மஹேந்திராவுக்கு என்ன சிகிச்சை அளித்து, எப்படி குணப்படுத்துவது? என்பது தெரியாமல் டாக்டர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.


வயதாக, ஆக மஹேந்திராவின் எடையும் அதிகரித்துக்கொண்டே வருவதால் அவனை தூக்கிக்கொண்டு திரிய முடியாத நிலையில் இருக்கும் சுமித்ரா வேதனை அடைந்துள்ளார். டாக்டர்களால் அவனை குணப்படுத்த முடியவில்லை என்றால், கடவுள் அவனை அழைத்துக்கொள்ளட்டும். எங்கள் கண் எதிரில் அவன் அவதிப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க எங்களால் இயலவில்லை என அவர் கண்ணீர் மல்க கூறுகிறார்.
« PREV
NEXT »

No comments